1. எல்லை தாண்டி மீன்பிடிக்க முயன்ற நாகை மீனவர்கள் 24 பேர் இந்திய கடற்படையினரிடம் சிக்கினர். அவர்கள் ராமேஸ்வரம் முகாமுக்கு அழைத்து வரப்பட்டு எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

2. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாகன சோதனையின் போது  1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

  

 

3. தூத்துக்குடி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 405 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1973 பேர் போட்டியிடுகின்றனர். 9 பேரூராட்சி கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

 

4. தூத்துக்குடி மாவட்டம்  கடம்பூர் முதல் நிலை பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



 

5. திண்டுக்கல்லில் மாநகராட்சி தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் செய்த மநீம வேட்பாளர் நேற்று திடீரென வாபஸ் பெற்று, திமுகவில் இணைந்தார்.

 

6. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

7. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 9வது வார்டில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீரென நேற்று வாபஸ் பெற்றார். இதனால் தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

 

8. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, நண்பரின் திருமணத்திற்கு வந்த மதுரை வாலிபர், வைகை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

9. மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடை பெற்றது. பின்பு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாரிகள் ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



 

10. நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 397 பதவிகளுக்கு களம் காணும் 1790 வேட்பாளர்கள், 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.