தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சியினர் மன்றத்தின் விதிமுறைகள் தெரிந்தும் அதை பின்பற்றாமல் நடந்துகொண்டது வருத்தமளிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாளில் கேள்வி நேரம் தொடங்கியதும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்கள் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கான நேரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் அவர்கள் கேள்வி நேரத்தில் விவாதத்தை தொடர விரும்பினர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து சட்டசபையில் இருந்து அதிமுகவினரை அவைக்காவலர்கள் வெளியெற்றினர். இந்த நிகழ்வுக்கு கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்க நேரம் கொடுக்கப்படும் என தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் வெளியேற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
அமைச்சர் துரைமுருகன் எதிர்க்கட்சியினரின் செயலுக்கு வருத்தம் அளிப்பதாக பேசினார். அவர் பேசுகையில், “ஒரு விரும்பத்தகாத நிகழ்ச்சியை எதிர்கட்சித் தலைவரும் அவரை சாந்தவர்களும் உருவாக்கியதற்காக இந்த மன்றம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறது. எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் சில நேரங்களில் நடக்க இருக்கிற நிகழ்வுகள் குறித்து பேசுவதற்கு வாதாடுவதற்கு உரிமை உண்டு; ஆனால், சட்டமன்றத்தில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டுதான் யாராக இருந்தாலும் அதை செய்ய முடியும். கேள்வி நேரம் என்பது மிக முக்கியமனாது. சட்டமன்ற விதிமுறைகளின்படி, யாருன் கேள்வி நேரத்தில் குற்றச்சாட்டுகள் சொல்ல கூடாது. கேள்வி - பதில் தவிர வேற ஏதும் பேச கூடாது என்று சொல்லப்பட்டுருக்கிறது. இதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது என்றால், தெரியும். எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தவர். அவையை நடத்தியவர். அவரே மாறுபட்டு இன்றைக்கு இப்படி நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.சபாநயகருக்கும் சட்டம் தெரியும்.
கேள்வி நேரம் முடிந்து ‘ஜீரோ நேரத்தில்’ இது குறித்து பேசலாம். சபாநாயகர் என்ன சொல்கிறார் என்று கேட்டிருக்கலாம். கள்ளச்சாரயம் குறித்து பேச அவர்களுக்கு உரிமை உண்டு; ஆனால், மன்றத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் சட்டம் தெரிந்தவர்கள், தவறென்று தெரிந்தவர்கள் கேள்வி நேரத்தின் தொடக்கத்தில் இப்படி நடந்த்துகொண்டதற்கு இந்த மன்றம் வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறது. அவர்களை முடிந்தளவிற்கு சமாதானம் செய்ய முயற்ச்சித்தும் அதை அவர்கள் கேட்பதாக இல்லை. தவிர்க்கமுடியாத காரணத்தில் அவர்கள்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து அனைத்து கட்சிகளும் விவாதிக்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விசாரிக்கலாம். ஆனால் அது விதியின்படி நடக்க வேண்டும். விதி என்பது முதலமைச்சராக இருந்த இபிஎஸ்க்கு நன்றாகவே தெரியும். சட்ட விதிகளை மீறி அதிமுகவினர் செயல்பட்டனர். அதனால்தான் வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன் “கேள்வி நேரம் என்பது முக்கியம். கேள்வி நேரத்தின்போது வேறு எந்த விவாதத்தையும் எழுப்பக்கூடாது என்பது விதி. விதியை மீறி செயல்பட்டதால் அவைத்தலைவர் வெளியேற்ற உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார்.