சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு  சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையின் மீது பதிலுரை அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அண்ணா மீது ஆணையாக, கலைஞர் ( கருணாநிதி) மீது ஆணையாக தி.மு.க.வினரே ஒரு  சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.


முன்னதாக, நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. சட்டமன்ற தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என்றும், தமிழக காவல்துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது என்றும், அ.தி.மு.க.வின் நிர்வாகிகளை கைது  செய்து வருகின்றனர் என்றும் சரமாரியாக தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண