2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு நேற்று தொடங்கியது. இதனையடுத்து இரண்டாம் நாள் அமர்வான இன்று கேள்வி நேர நிகழ்வு நடக்கிறது. கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ஹெலிகாப்டர் விபத்தி சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துரைமாணிக்கம், உயிரிழந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் பதிலளித்தனர். இந்தக் கேள்வி நேர நிகழ்வானது முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இந்நிலையில், மெட்ரோ திட்டம் விரிவாக்கம் தொடர்பக பல்லாவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலிNn, “மெட்ரோ திட்ட விரிவாக்கம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவருகிறது. கிளாம்பாக்கம்வரை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. மீனம்பாக்கம் கிளாம்பாக்கம்வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajendra Balaji: ஏன் தலைமறைவாக இருந்தீர்கள்? ராஜேந்திரபாலாஜியிடம் நீதிபதி சரமாரி கேள்வி..