சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவிற்கு, ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில் ஆளுநரை செயல் குறித்து பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.


தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரை வழங்க மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி தனித்தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் ஆளுநர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.