மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே விவசாயத்திற்கு என்று வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு:
வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனித்துவ அடையாளமான புவிசார் குறியீட்டின் கூடிய வேளாண் விளைபொருட்கள் உலக அளவில் பெரும்பாலான மக்களால் அறியப்படுவதால், அவற்றின் சந்தைத் தேவை அதிகரிப்பதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் ஏற்படும். தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் 35 வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவமான புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறீயிடு பெறப்பட்டுள்ளது.
இதன் மகத்துவம் அறிந்து 2025 - 26ம் ஆண்டில் நல்லூர் வரகு (கடலூர்) வேதாரண்யம் முல்லை ( நாகப்பட்டினம்) நத்தம் புளி ( திண்டுக்கல்) ஆயக்குடி கொய்யா ( திண்டுக்கல்) கப்பல்பட்டி கரும்பு முருங்கை ( திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
இவ்வாறு அவர் பேசினார்.