கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்த செலவில் பல இடங்களை சுற்றி பார்க்கலாம் 


திருவண்ணாமலையும் சுற்றுலா ஸ்பாட்தான் 


கோடை விடுமுறை என்பதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஊட்டியும், கொடைக்கானலும், மதுரையும், குமரியும், ஏற்காடும்தான். இவை  நல்ல சுற்றுலாதலங்கள் தான். ஆனால் அங்கு குவியும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் இதனால் ஏற்படும் வசதிக்குறைபாடுகளும், போக்குவரத்து அசதியும், கொஞ்சம் அதிகம்தான். அதனால் தமிழ்நாட்டில் இருக்கும் அதிகமாக பார்க்காத இடங்களுக்கும் சுற்றுலா செல்ல முயற்சிக்கலாம். செலவும் கம்மியா வேணும், சுற்றுலாவும் போகணும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இங்க குளிர்ச்சியுடன் இயர்கையுடன் ஒன்றிப்போக கூடிய  இடங்கள் இருக்கு.


திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை சார்ந்த, தொன்மம் சார்ந்த, வரலாற்று சிறப்புடைய, பண்பாட்டு சிறப்புடைய பல இடங்கள் உள்ளன. இவற்றைக் காண பணம், நேரம் இவற்றைத் தாண்டி நமக்கு மனது மட்டுமே போதும். இந்த மாதத்தின் வார இறுதி நாட்களுமே நமக்கு போதாது இந்த இடங்களைக் காணவும், அனுபவிக்கவும்.. அவ்வளவு இடங்கள் உள்ளன. 


ஜவ்வாது மலைக்குச் செல்லாம் 


1. ஜவ்வாதுமலை அமிர்தி
2. ஜவ்வாதுமலை பீமன் அருவி
3. ஜவ்வாதுமலை, கோட்டைப்பகுதி
4. ஜவ்வாதுமலை – மேல்பட்டு மருதமரம்
5. ஜவ்வாதுலை – மேல்பட்டு – கீழ்பட்டு புதிய கற்காலப்பகுதி
6. ஜவ்வாதுமலை – மேல்பட்டு – புலிக்குத்தி பட்டான் கல்பகுதி
7. ஜவ்வாதுமலை மேல்பட்டு – கண்ணாடி மாளிகை
8. ஜவ்வாதுமலை – கீழ்பட்டு அருவி 
9. ஜவ்வாதுமலை – பண்டிரேவ் அருவி


கல்வராயன் மலை


1. கல்வராயன் மலை – ஆத்திப்பாடி அருவி
2. கல்வராயன் மலையடிவாரம்
3. பர்வதமலையடிவாரம், மலைக்கோயில்
4. பர்வதமலை சுற்றுப்பாதை, மண்டபங்கள், வெள்ளந்தாங்கீஸ்வரர் கோயில்
5. மட்டமலை இராஜராஜன் பற்றிய கல்வெட்டு- தென்மாதிமங்கலம்
6. அத்திமூர் கோட்டை அல்லது பொத்தரை கோட்டை
7. பழையனூர் கோட்டை
8. படைவீடு பகுதிகள்


 




 


பொழுதுபோக்கு பூங்கா மற்றும் அணைகள் 


1. சாத்தனூர் அணை, தண்டாராம்பட்டு வட்டம்


2. மிருகண்டாநதி அணை, மேல்சோழங்குப்பம், 


3. குப்பநத்தம் அணை, செங்கம் வட்டம்


4. செண்பகத்தோப்பு அணை, படைவீடு


5. அலியாபாத் அணைக்கட்டு, படைவீடு


6. ஆரணி அணைக்கட்டு, கொழப்பலூர்


திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகவும் பழமையான கோயில்கள் 


1. குடைவரைக்கோயில்கள்


2. ஆவூர் – சிறிய குடைவரை


3. சீயமங்கலம்- முதல் நடராஜர் சிற்பம் உள்ள குடைவரை


4. மாமண்டூர்- தமிழகத்தின் பெரிய குடைவரை


5. குரங்கணில்முட்டம்- கல்மண்டபம் 


சமணக்கோயில்கள்


6.திருமலை – ஓவியம், கல்வெட்டு, கட்டடக்கலை


7.கரந்தை – கல்வெட்டு, கட்டடக்கலை, சிற்பங்கள்


8.பொன்னூர் – குன்று, பாதம், ஆராய்ச்சிக்கூடம்


9.பூண்டி அருகர் கோயில்