திருவண்ணாமலை ( Tiruvannamalai News): திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ஊராட்சிகளுக்கு குப்பைகள் சேகரிப்பதற்கு மோட்டார் பொருத்திய வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. 52 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 13 இலட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் 86 மின்களன் வண்டி மற்றும் 70 இலட்சம் மதிப்பில் 8 ஊராட்சிகளுக்கு டிராக்டர் வண்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தூய்மை பாரத இயக்கம் சார்பில் இவை வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வாகனத்தை இயக்கி சோதனை செய்தார். 


 




 


அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசுகையில்; "திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 69 ஊராட்சிகள் உள்ளன. அதில் முதற்கட்டமாக 52, ஊராட்சிகளுக்கு 86 மீன்கல வண்டியினை மற்றும் வேங்கிக்கால் ஊராட்சிக்கு 4 டிராக்டர், நல்லவன் பாளையம், அண்டம்பள்ளம், சின்னகாங்கயனூர், தென்மாத்தூர், பழையனூர், பவித்திரம், ஆடையூர் என மொத்தம் 8 ஊராட்சிகளுக்கு 11 டிராக்டர் வண்டியினை தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் மற்றும் மின்கலன் வண்டி எதற்காக பயன்படுத்துவது என்பதை புரிந்து அதன் முக்கியத்துவத்தை அறிய வேண்டும், திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்த இந்த வண்டியினை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் 98 டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கலன் வண்டி வாங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடு வீடாக சென்று குப்பையினை சேகரித்து அதனை உரமாக தயார்செய்ய வழிவகை செய்ய வேண்டும், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 15-வது நிதிகுழு மானியத்தில் ரூபாய் 85 ஆயிரம் மதிப்பின் குப்பைகளை தரம் பிரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு இரண்டாம் கட்டமாக ரூபாய் 15 ஆயிரம் மானியமும் வழங்கப்பட்டு இக்கூடத்திற்கு சுமார் ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் வேண்டும் 


 


 




மேலும் வேங்கிக்கால் ஊராட்சி அண்ண நுழைவு வாயில் முதல் வேலூர் சாலை வரை அங்காங்கே கிடக்கும் குப்பைகளை உடனாடியாக அகற்ற அங்கு உள்ள தொழிற்சார்ந்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதனை சீர் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் ஆகவே ஆரம்பத்திலேயே குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்துவிட்டால் வேலை எளிமை ஆகிவிடும். தூய்மை பணியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பையை மூட்டையாக வாங்காமல் தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வாங்க வேண்டும். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் வீடுகளில் நின்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது நோக்கம் எண்ணவென்றால் நகரம் மற்றும் கிராமங்களை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற நலைவர்கள் தூய்மை பணிகளை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்சசி அலுவர்கள் பேரூராட்சி செயல் அலுவர்கள் ஊராட்சி மன்ற செயல் அலுவலர்கள். அனைவரும் தூய்மை பணியாளர்களை கொண்டு காலை 5 முதல் 10 மணிக்குள் குப்பைகளை அகற்றினால் தான் பொதுமக்கள் வேலைக்கும் செல்லும் போது இடையூறு ஏதும் இல்லாமல் இருக்கும். எனவே தூய்மை பணிகளை தனிகவனத்துடன் மேற்கொள்ள வேண்டும்” என பேசினார். இந்நிகழ்ச்சிப்பில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ. ரிஷப் வட்டரா வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர் கலந்து கொண்டார்.