IT Raid: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனை விரிவு படத்த பட்டு தானிப்பாடியை சேர்ந்த ஜமால் பாய் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரி துறையின் 20 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில் வீடு , அந்த வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, அருணை பார்மஸி கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, அருணை செவிலியர் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கரன் கலைக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களும் மற்றும் முகாம் அலுவலகம் ஆகிய இடங்களில் 30 கார்களிலிலும் 3 பேருந்துகளிலும் 150-க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் அதிரடியாக ( நவ3 )தேதி அதிகாலை 6 மணிக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் துவங்கியது.

Continues below advertisement

 


 

அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வவேலுக்கு சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தை அருணை வெங்கட் என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தார் சாலை காண்டாக்ட், கட்டுமான பணிகள், கால்வாய் போன்றவைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையின் பணிகளை எடுத்து செய்து வருகிறார். மேலும் திரவண்ணாமலை நகரத்தில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடைப்பெற்று வருவகின்றனர். காலைமுதல் அருணை கட்டுமான நிறுவனத்தில் நடைப்பெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர்.


 

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று திருவண்ணாமலை கீழ் நாச்சி பட்டு பகுதியில் உள்ள கஜலட்சுமி நகரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் இரண்டாவது மகன் டாக்டர் எ.வ.கம்பனின் வீட்டில் இரண்டு கார்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரி துறை அதிகாரிகள் காலைமுதலே சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சரின் எ.வ.வேலு வின் தொடர்புடையவர்களின் சோதனை விரிவு படுத்தபட்டு திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த அலிபாயில் மகான் ஜமால் பாய் இவர் அப்பகுதியில் கம்பி கடை, சிமெண்ட் கடை, பெட்ரோல் பங்க், மொத்த வியாபாரம் செய்து வருகிறார். தற்போது அவருடைய வீட்டில் கடை,வீடு மற்றும் குடோன்,பெட்ரோல் பங்க் உள்ளிட்ட நான்கு இடங்களில் மத்திய துணை தொழிற் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வருமான வரி துறை அதிகாரிகள் 3 கார்களில் 20க்கும் மேற்பட்டோர்கள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை விரிவு படுத்த உள்ளனர். தொடர் வருமான வரி துறையினர் சோதனை திமுக பிரமுகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை. சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த சோதனையானது நாளை வரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு புகாரிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவும் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola