Tiruppur Power Shutdown: திருப்பூரில் நாளை (10.11.2025) பல்வேறு இடங்களில் உள்ள மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. திருப்பூர் மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?

பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட  இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை,  மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

Continues below advertisement

நாளைய மின் தடை இங்கெல்லாம்?

கரடிவாவி, கரடிவாவி புதூர், பருவாய், ஆறாக்குளம், ஊத்துக்குளி, மல்லேக்கவுண்டன்பாளையம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பட்டி, எம்ஜி சாலை, எஸ்ஐஎச்எஸ் காலனி, காவேரி நகர், ஜேஜே நகர், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்கள். உடுமலைபேட்டை பகுதியில் உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா்

முன்னெச்சரிக்கை:

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு அன்றாட பணிகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.