சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, அங்கிருந்து இயக்கப்படும் சில முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Continues below advertisement

முன்னதாக செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், நவம்பர் 10 முதல் நவம்பர் 30 வரை மாற்று ஏற்பாடுகள் தொடரும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை இதனை கருத்தில் கொண்டு அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Continues below advertisement

தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் ரயில்கள்

  • ரயில் எண். 16866 தஞ்சாவூர் – சென்னை எழும்பூர் உழவன் விரைவு: நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். (வருகை: அதிகாலை 03.45 மணி)

  • ரயில் எண். 20636 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி அதிவிரைவு: நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். (வருகை: காலை 05.45 மணி)

  • ரயில் எண். 22662 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சேது அதிவிரைவு: நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். (வருகை: காலை 06.35 மணி)

  • ரயில் எண். 16752 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில்: நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். (வருகை: காலை 06.45 மணி)

புறப்படும் நிலைய மாற்றம்

  • ரயில் எண். 16865 சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு: நவம்பர் 11 முதல் 30 வரை தாம்பரம் (இரவு 11.00 மணி) இருந்து புறப்படும்.

  • ரயில் எண். 20635 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி அதிவிரைவு: நவம்பர் 11 முதல் 30 வரை தாம்பரம் (இரவு 08.20 மணி) இருந்து புறப்படும்.

  • ரயில் எண். 22661 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சேது அதிவிரைவு: நவம்பர் 11 முதல் 30 வரை தாம்பரம் (மாலை 05.45 மணி) இருந்து புறப்படும்.

  • ரயில் எண். 16751 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் விரைவு ரயில்: நவம்பர் 11 முதல் 30 வரை தாம்பரம் (இரவு 07.15 மணி) இருந்து புறப்படும்.

  • ரயில் எண். 22158 சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு: நவம்பர் 11 முதல் 30 வரை சென்னை கடற்கரை (காலை 06.45 மணி) இருந்து புறப்படும்.

  • ரயில் எண். 16127/16128 சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு: மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் இருந்து தொடரும்.

வழித்தட மாற்றங்கள்

  • ரயில் எண். 09419 அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி வாராந்திர விரைவு: நவம்பர் 13, 20, 27 தேதிகளில் அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு வழியாகச் செல்லாது. ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்படும். திருத்தணியில் கூடுதல் நிறுத்தம் (01.00/01.05). அளிக்கப்பட்டுள்ளது

  • ரயில் எண். 09420 திருச்சிராப்பள்ளி – அகமதாபாத் வாராந்திர விரைவு: நவம்பர் 16, 23, 30 தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் வழியாகச் செல்லாது. வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்படும். திருத்தணியில் கூடுதல் நிறுத்தம் (03.15/03.20).

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில்,“எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக இந்த தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எழும்பூரிலிருந்து பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள் அனைவரும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு புதிய புறப்படும் நிலையங்களுக்கு (தாம்பரம் / சென்னை கடற்கரை) நேரத்தில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது,”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.