Tiruppur Power Shutdown: திருப்பூரில் இன்று சனிக்கிழமை (02.08.2025) பல்வேறு இடங்களில் உள்ள மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. திருப்பூர் மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
அவிநாசி , வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், பழங்கரை, ஸ்ரீநிவாசபுரம், சூலை, VOC காலனி, சக்திநகர், எஸ்பி ஆடை, குமரன் காலனி, ராக்கியபாளையம், காமராஜ் நகர், அவிநாசி கைகாட்டிப்பு, ஆண்டிபாளையம், இடுவம்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம், ராஜகணபதிநகர், ஜீவநகர், கேஎன்எஸ் நகர், முல்லைநகர், இடும்பன் நகர், காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், எவர்கிரீன் அவென்யூ, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர், ஜீவநகர், முல்லை நகர், வஞ்சிபாளையம், காமாட்சி நகர், செல்லம் நகர், அம்மன் நகர், எர்வர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம். கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம்.மா நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி மில்.