பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இது குறித்த முன்னறிவிப்பையும் மின் வாரியம் சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளைய தினம் (16.12.2025) செவ்வாய்க்கிழமை அன்று வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக, நாளைய தினம் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு,
மின் தடை பகுதிகள்
திருப்பூர் மாவட்டத்தில் வட்டமலை, ஊதியூர், பொத்திபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துக்காளிவலசு, வடசின்னாரிபாளையம், வெள்ளகோவில், நடேசன் நகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குறுக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே. பி.சி. நகர், சேரன் நகர், காமராஜபுரம், ராசாத்தா வலசு, பாப்பினி, அஞ்சூர் ஆகிய இடங்கள்.
மேலும், தாசநாயக்கன்பட்டி, நாகம்மா நாயக்கன் பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பிளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம் பூண்டி, கும்பம் பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூர். என்.ஜி. வலசு, வரக்காளிபாளையம் ஆகிய பகுதிகள். உடுமலை பகுதியில், கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய இடங்கள்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.