Tiruppur: திருப்பூரில் ஒரு மாணவிக்கு மருத்துவ படிக்க சீட் கிடைத்தும் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையால் கல்லூரிக்கு செல்ல இயலாத நிலை மிகுந்த வருதத்தை அளித்திருந்தது.


திருப்பூர் மாவட்டம் வேடப்பட்டி கிராமத்தில் கூலித் தொழிலாளி மற்றம் தூய்மை பணியாளராக  இருக்கும் ஆறுமுகம் இந்திராணி தம்பதி. இவரது மகள் பட்டீஸ்வரி. ஒன்றாம் வகுப்பு முதல் அரசுப் பள்ளியில் படித்த பட்டீஸ்வரி நீட் தேர்வில் ஒருமுறை தோல்வி அடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் சொந்த முயற்சியில் மீண்டும் தேர்வு எழுதி 117 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.


 சாதாரண பின்னணியை கொண்ட பட்டீஸ்வரி படிப்பது மட்டுமே வேலையாக இல்லாமல்,  கால்நடைகளை மேய்த்து கொண்டு வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே படித்தார். பின்பு தந்தையுடனும் வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இவரது விடா முயற்சி மற்றும் வீட்டின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவி படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 


சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயில இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பலருக்கு  கனவாக இருக்கும் ஸ்டான்லி கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்தும் சென்னைக்கு அனுப்பு வைக்க கூட போதுமான வழி இல்லாமல் தவித்து வருகின்றனர்.  


இதனை அறிந்த, வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துர்கை வேல் மற்றும் மனத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த மாணவிக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் மாணவி சென்னைக்கு சென்று வர போதுமான நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்திருந்தனர்.


இதுபோன்ற பலர் வறுமையில் வாடி வருகின்றனர். ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருளை வாங்கக் கூட இயலாமல் கஷ்டத்தில் பலர் உள்ளனர். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அந்த மாணவியின் சூழ்நிலையை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தனர். இதனை அடுத்து மாணவி குடும்பத்தினர் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


Madhya Pradesh : ஒன்றாக விஷம் அருந்திய தோழிகள்..! 2 பேர் மரணம் - ஒருவர் கவலைக்கிடம்..! நடந்தது என்ன..?


திருச்சி: நகை பாலிஷ் செய்வதாக கூறி மோசடி - 2 பேர் கைது


திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் - அதிகாரிகளை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு