திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை 5 மணி நேரத்தில் தட்டி தூக்கிய தனிப்படை போலீசாரின்  செயல் பாராட்டை பெற்று வருகிறது

 திருப்பத்தூர் அடுத்த ஆரிப் நகர் பகுதி சேர்ந்த பஷீர் இவருடைய மனைவி ரேஷ்மா (38) வீட்டில் தனியாக இருந்து வந்த நிலையில்  மர்ம நபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து  சைக்கிள் ஒன்றை திருடன் முயற்சி செய்துள்ளார். 

இதனை அறிந்த ரேஷ்மா கத்தி கூச்சலிடேவே அருகில் இருந்த இரும்புராடால் பலமாக தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தால் பின்பு ரேஷ்மாவின் தொலைபேசியையும் அங்கிருந்து மர்ம நபர் எடுத்துச் சென்றார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்க அக்கம் பக்கத்தினர் ரேஷ்மாவின் வீட்டில் சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்தார்  அவரை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் பலத்த காயமடைந்த ரேஷ்மா உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்இதன் காரணமாக திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா  தலைமையில் தனிப்படை  அமைத்து  மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர் 

அப்போது அக்கம் பக்கத்தினரை  விசாரித்த போது அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்க அடையாளங்களை வைத்து அப்பாய்தெரு பகுதியில் தனிப்படையினர் ஒருவனை பிடித்து   விசாரணை மேற்கொண்டத்தில்  கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சு மகன் முகிலன் என்பது தெரிய வந்தது மேலும் திருட வந்த இடத்தில் இரும்புராடால் பெண்ணை தாக்கியதும் ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக தனிப்படை போலீசார் முகிலனை பிடித்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் முகிலிடமிருந்து சைக்கிள் மற்றும் ரேஷ்மாவின் செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர். 

திருப்பத்தூர் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சம்பவம் நடத்த 5 மணி நேரத்தில் தனிபடையினர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்த சம்பவம் பாராட்டுதலை பெற்றது.