டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு - ஆம்பூர் அருகே சோகம்

கண் இமைக்கும் நேரத்தில் இந்நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

Continues below advertisement
ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். 100 அடி கிணற்றில் கவிழ்ந்த டிராக்டர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (35). டிராக்டர் ஓட்டுராக பணிபுரிந்து வருகிறார்.
 
இவர் இன்று காலை, அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு டிராக்டர் மூலம்  ஏரிக்கரை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாரா விதமாக டிராக்டர் வெங்டேசனின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரையின் மீது இருந்து அருகே இருந்த பள்ளத்தில் தாறுமாறாக ஓடியுள்ளது.
 
இதில் நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்த போது  வெங்கடேசன்  மீது டிராக்டர் ஏறி இறங்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்துள்ளார்.

 
அதனை தொடர்ந்து டிராக்டர் மேலும்  கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த விஜயகுமார் என்பவரின் நிலத்தில் போடப்பட்டிருந்த கொட்டகையை இடித்து கொண்டு அங்கிருந்த 100 அடி  கிணற்றில் கவிழ்ந்து  மூழ்கியுள்ளது,
 
கண் இமைக்கும் நேரத்தில் இந்நிகழ்வை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர்  வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  
மேலும் விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக டிராக்டரில் சென்ற நபர் டிராக்டர் ஏறி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Continues below advertisement
Sponsored Links by Taboola