ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!

ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!

Ad
செல்வகுமார் Updated at: 09 Sep 2024 07:51 PM (IST)

Tirupathur Stray Dog Attacks Child Boy: திருப்பத்தூரில் பள்ளி சிறுவனை தெரு நாய் தாக்கிய செய்தி வெளியான நிலையில் மாவட்ட நிர்வாகமானது நடவடிக்கை எடுத்துள்ளது. 

ABP நாடு IMPACT: சிறுவனை துரத்தி தாக்கிய தெருநாய்:..! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.!

தெருநாயை பிடித்துச் சென்ற ஊழியர்கள்

NEXT PREV





















சிறுவனை தெரு நாயானது, துரத்தி துரத்தி கடித்தது. இதை ஏபிபி நாடு செய்தியாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.


பள்ளிச் சிறுவனை தாக்கிய வெறிநாய்:


திருப்பத்தூர் ஹாரிப் நகர் பகுதியை சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் (7) என்ற சிறுவன் கடந்த 3 ஆம் தேதி பள்ளிக்குச் சென்றார்.


திருப்பத்தூர் ராஜன் தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சிறுவன் தனது நண்பர்களுடன் சென்ற கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் சிறுவன் அத்திக்கை துரத்தி துரத்தி கடித்தது.


பின்னர், அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாயை துரத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஒரு நபர் இரு சக்கர வாகனத்தில் வந்து நாயின் மீது மோதி நாயை தள்ளியதையடுத்து,  நாய் அங்கிருந்து தப்பி சென்றது.


பின்னர் சிறுவன்  சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அத்திக் தற்போது நலமுடன் உள்ள நிலையில், மேலும் சிறுவனை தெரு நாய் கடித்தது. அந்த காட்சியானது, சிசிடிவி-யில் பதிவான நிலையில் , அந்த காட்சிகளும் வெளியானது.




மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை:


இது தொடர்பாக ஏபிபி நாடு வலைதளத்தில் செய்தியால ஒளிபரப்பப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் ராணிப்பேட்டையில் இருந்து தெருநாய்களை பிடிக்கும் குழுவை வரவழைத்து.


 


திருப்பத்தூர் நகராட்சிக்குட்ப்பட்ட  ராஜன் தெரு,ஆரிப் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த   சுமார் 50க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து, நகராட்சி அதிகாரிகள் நாய்களுக்கு கருத்தடை செய்ய கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






















Published at: 09 Sep 2024 07:43 PM (IST)
Tags: street dog stray dog Tirupathur
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.