தமிழ் கடவுளன முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளது. அதில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இங்கு தினமும் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிப்பட்டு செல்வது வழக்கம், இதனால் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தினமும் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

நீண்ட நாள் கோரிக்கை: 

திருச்செந்தூரில் இருந்து முருகப்பெருமானின் ஆறுப்படை வீடுகளுள் ஒன்றான திருத்தணிக்கு பேருந்து சேவை வேண்டுமென பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையிலும், முதல்வர் உத்தரவின்படியும் திருத்தணியில் திருச்செந்தூருக்கு புதிய சேவை தொடங்கு என்று அறிவிக்கப்பட்ட்டது.

Continues below advertisement

தொடங்கப்பட்ட சேவை: 

திருத்தணியில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த பேருந்தானது திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக செல்லும். 191 HU என்ற வழித்தடத்தில் இயங்கும் இந்த பேருந்தானது திருத்தணியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.45 மணிக்கு சென்றடையும், அதே போல மறுமார்க்கத்தில் இதே நேரத்தில் திருச்செந்தூரில் புறப்பட்டு திருத்தணியை சென்றடையும். 

இந்த பேருந்துக்கான கட்டணம் ரூ.640-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் மூலம் திருச்செந்தூரில் இருந்து கோவில் நகரமான காஞ்சிபுரம், அரக்கோணம் பகுதிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் திருத்தணி புதிய வழித்தடங்களில் அரசு விரைவுப்பேருந்து சேவைகளை தொடங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

இந்த  பேருந்துக்கான முன்பதிவை https://www.tnstc.in/OTRSOnline/ என்கிற இணையதளம் மூலமும் TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்