• சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280க்கு விற்பனை.
  • உலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டம் தொடங்கியது. 96 அடி உயரமும், 350 டன் எடையும் கொண்ட பிரமாண்டத் தேர் 4 வீதிகள் வழியாக செல்லும்.
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமா்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்!
  • பக்கிங்காம் கால்வாயில் 3 புதிய பாலங்களை கட்ட டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி.
  • திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பாம்பம்பாளையம் கிராமத்தில், தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழப்பு, 7 ஆடுகள் காயம்
  • 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
  • திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக எம்.பி., அருண் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
  • சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை; TVH குரூப் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை
  • சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை
  • கூட்டணி வைக்க அந்த கட்சியை நாடி வந்த காலம் போய் இன்று ஓடி ஓடி டெல்லிக்கு சென்று கூட்டணி வைக்கிறார்கள்.. கார்த்தி சிதம்பரம் வேதனை..
  • தாய்லாந்து, இலங்கை மற்றும் தமிழ்நாடு பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்றடைந்தார் பிரதமர் மோடி..
  • 21ஆம் தேதி வரை நடைபெற இருந்த தொடக்கப் பள்ளி தேர்வுகள் 17ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்
  • சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்படும் - துணை முதலமைச்சர் உதயநிதி