விழுப்புரம் : பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரம்மதேசம் காவலர் இளங்கோவை போக்சோ வழக்கில் திண்டிவனம் மகளிர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார் . 

Continues below advertisement

பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் 

குயிலாப்பாளையம் மற்றும் கொந்தாமூரை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் பணிரெண்டாம் வகுப்பு மாணவன் இருவரும் காதலித்து வந்த நிலையில் சென்னைக்கு வீட்டிற்கு தெரியாமல் கடந்தி 6 ஆம் தேதி சென்றுள்ளனர். சென்னையிலிருந்து திரும்பிய இருவரும் மீண்டும் இரவு வீடு திரும்பிய போது பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மன்னார்சாமி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பிரம்மதேசம் காவலர் இளங்கோ இருசக்கர வாகனத்தில் அதிகாலை வந்த இருவரை பிடித்து விசாரனை செய்தார்.

அப்போது வீட்டிற்கு தெரியாமல் சென்னை சென்றதும் பிரம்மதேசம் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் பள்ளி மாணவியும் மாணவனும் தனிமையில் இருந்ததை தெரிந்து கொண்ட காவலர் இளங்கோ, பள்ளி மாணவனை வீட்டிற்கு போக சொல்லி அனுப்பி வைத்துவிட்டு மாணவியை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி மாணவியை அழைத்து சென்றபோது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Continues below advertisement

அப்போது பள்ளி மாணவி இது போன்ற செயலில் ஈடுபட்டால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என தெரிவிக்கவே காவலர் பயந்து மாணவியை பாதி வழியிலையே நிறுத்தி பேருந்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற மாணவி பெற்றோரிடத்தில் நடந்ததை கூறியுள்ளார். மேலும் காவலர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

பணியிடை நீக்கம்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏற்கனவே மகளை காணவில்லை என ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் காவலர் தவறாக நடந்து கொண்டதை தெரிவித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த திண்டிவனம் மகளிர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரனை செய்து காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரம்மதேசம் காவலர் இளங்கோவை போக்சோ வழக்கில் திண்டிவனம் மகளிர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார் . 

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

போக்சோ சட்டத்தின் அம்சங்கள்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்