Southern Railway: தென்மாவட்டங்களுக்கான ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, குறிப்பிட்ட விரைவு ரயில்களின் புறப்படும் மற்றும் நிறுத்தப்படும் இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை பயணிகள் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப பயணதிட்டங்களை திட்டமிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவை பகுதியளவு ரத்து
- தஞ்சாவூரில் இருந்து இரவு 21.50 மணிக்கு புறப்படும் தஞ்சாவூர் சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 10, 2025 முதல் 29, 2025 வரை தாம்பரத்தில் நிறுத்தப்படும். தாம்பரத்திற்கு வரும் நேரம் 03.45 மணி.
- நவம்பர் 10, 2025 முதல் 29, 2025 வரை மதியம் 2.55 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் எண் 20636, கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிறுத்தப்படும். தாம்பரம் வந்து சேரும் நேரம் காலை 05.20 மணி.
- நவம்பர் 10 முதல் 29, 2025 வரை ராமேஸ்வரத்தில் இருந்து 20.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 22662 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் நிறுத்தப்படும். தாம்பரம் வந்து சேரும் நேரம் காலை 06.35 மணி
- நவம்பர் 10 முதல் 29, 2025 வரை ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 16752 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், தாம்பரத்தில் நிறுத்தப்படும். தாம்பரம் வந்து சேரும் நேரம் காலை 06.45 மணி
அதாவது மேற்குறிப்பிடப்பட்ட ரயில்கள் எழும்பூர் வரை இயக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் புறப்படும் இடம் மாற்றம்:
- நவம்பர் 11 முதல் 30, 2025 வரை இரவு 22.25 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் எண் 16865 தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், இரவு 23.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்
- நவம்பர் 11 முதல் 30, 2025 வரை இரவு 7.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் எண் 20635, சென்னை எழும்பூரிலிருந்து 20.20 மணிக்கு புறப்படும்
- மாலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் சேது சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், நவம்பர் 11, 2025 முதல் 30, 2025 வரை மாலை 5.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- மாலை 5.15 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், நவம்பர் 11, 2025 முதல் 30, 2026 வரை இரவு 5.42 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும்.
- காலை 6.35 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட வேண்டிய மும்பை சிஎஸ்எம்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், நவம்பர் 11, 2025 முதல் 30, 2026 வரை காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இதனிடையே, சென்னை எழும்பூர் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்தில் புறப்பட்டு, அங்கேயே முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் ரயில்கள்:
- நவம்பர் 13, 20, 27, 2025 முதல் வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் அகமதாபாத் திருச்சிராப்பள்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நிறுத்தங்களைத் தவிர்த்து, ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும். திருத்தணியில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும் (வருகை/புறப்படும் நேரம்: 13.00/13.05).
- நவம்பர் 16, 23, 30, 2025 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 05.45 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும் அகமதாபாத் வாராந்திர விரைவு ரயில், வேலூர் கண்டோன்மென்ட், காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா வழியாக திருப்பி விடப்படும், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் நிறுத்தங்களைத் தவிர்க்கும். திருத்தணியில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும் (வருகை/புறப்படும் நேரம்: 15.15/15.20) என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.