புதிய பாம்பன் பாலத்தில், ரயில்கள் வேகமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரம் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Continues below advertisement

பாம்பன் பாலத்தில் ரயில்கள் 75 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதி

ராமேஸ்வரத்தில் உள்ள பழைய பாம்பன் பாலத்தில், ரயில்கள் 10 கிலோ மீட்டர் வேகத்திலேயே சென்று வந்தன. இந்நிலையில், பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது. அதை, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில், இந்த புதிய பாரத்தில், ரயில்கள் 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமேஸ்வரம் சென்று வரும் ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றி அமைத்து, புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

எந்தெந்த ரயில்கள் எந்த நேரத்தில் செல்லும்.?

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, 

  • ராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ்(16850) வரும் 14-ம் தேதியிலிருந்து மதியம் 2.50 மணிக்கு பதில், 3 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16780) வரும் 15-ம் தேதியிலிருந்து மாலை 4.20 மணிக்கு பதில் 4.30 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(16752) வரும் 14-ம் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - கோவை எக்ஸ்பிரஸ்(16617) வரும் 14-ம் தேதியிலிருந்து இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ்(22662) வரும் 14-ம் தேதி முதல் இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.
  • ராமேஸ்வரம் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்(22621) ஜூன் 7-ம் தேதியிலிருந்து இரவு 9.10 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் எனவும் அறிவிப்பு.
  • ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்(56716) வரும் 14-ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கு புறப்படும்.
  • மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில்(56711) வரும் 14-ம் தேதி முதல் காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக்கே புறப்படும்.
  • ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில்(56714) வரும் 14-ம் தேதியிலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கே புறப்படும்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அட்டவணையில் இந்த மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.