கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். வெளியான தேர்தல் முடிவுகளின் பின் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்தியது. இந்நிலையில் இன்று மாலை அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கூட்டம் தொடங்கியுள்ளது. அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்பொழுது தொடங்கிய அதிமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.