தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக (Aspirational block ) உருவாக்க அனைத்து துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு அரசு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர் ஆலோசனை மேற்கொண்டார்கள். 

 

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக உருவாக்க அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசுதிட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தெரிவிக்கையில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முன்னேற விளையும் ஒன்றியமாக கண்டறியப்பட்டது. இந்தியா முழுவதும் 500 ஊராட்சி ஒன்றியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 16 ஊராட்சி ஒன்றியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் ஆகும் . மனிதவள குறியீடுகளின் படி வகைப்படுத்தப்பட்டு தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக கண்டறியப்பட்டுள்ளது.

 

 

முன்னேற விளையும் ஒன்றியங்களில் செயல்பாடுகளின் சிறப்பாக செயல்படும் ஒன்றியங்களில் தரக் குறியீடுகளின் படி பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுதிட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர் தெரிவித்தார். கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் தாய், சேய் ஊட்டச்சத்து பெட்டகத்தின் தரம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.  சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நீர்பாசனம், ஊட்டச்சத்து ஆகியவை மூலம் மனித வள குறியீடு சார்பாக கணக்கிடப்பட்டுள்ளது. முன்னேற விளையும்  ஒன்றியங்களில் செயல்படுங்கள் குறித்து கணக்கிடப்பட உள்ளது.  அனைத்து துறை அலுவலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில்  கூட்டு முயற்சியோடு செயல்படுவதன் மூலம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக மாற்றிட முடியும். குறியீடு தொடர்பான  அரசாணை வெளியாகவில்லை. அரசாணை வந்தவுடன்  அதற்குரிய பணிகள் நடைபெறும். கீழவெளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம்  வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு பயிலும் வளரிளம் பெண்களுக்கு உதிரம் உயர்த்துவோம் திட்டப் பணிகளின் மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உதிரம் உயர்த்துவோம் செயல்பாடுகள் குறித்து காணொளி காட்சி ஒளிபரப்பப்பட்டதை பார்வையிட்டு இரத்தக்சோகை குறைபாடு குறித்து மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

 

 

சுகாதாரம், கல்வி, வேளாண்மை, நீர்பாசனம், ஊட்டச்சத்து ஆகியவை மூலம் மனித வள குறியீடு சார்பாக கணக்கிடப்பட்டுள்ளது. முன்னேற விளையும்  ஒன்றியங்களில் செயல்படுங்கள் குறித்து கணக்கிடப்பட உள்ளது.  அனைத்து துறை அலுவலர்கள் பல்வேறு திட்டப்பணிகளில்  கூட்டு முயற்சியோடு செயல்படுவதன் மூலம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தை முன்னேற விளையும் ஒன்றியமாக மாற்றிட முடியும். குறியீடு தொடர்பான  அரசாணை வெளியாகவில்லை. அரசாணை வந்தவுடன்  அதற்குரிய பணிகள் நடைபெறும்.காவல்காரன்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தாய்மார்களிடம் குழந்தைகள் எடை, உயரம் அளவிடு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவின் தரம் ஆகியவற்றை கேட்டறிந்தார்.