இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோள்களின் இயக்கத்தில் பூமியின் வட அரைக்கோளத்தில் குளிர்கால சங்கராந்தி ஒரு புதிய ஆரம்பத்தை ஒரு புதிய சாத்தியத்தை புது வாழ்வை குறிக்கிறது வருடத்தின் இந்த சமயத்தில் பூமி தன் மேற்தோலை உரிப்பது போலத் தெரிகிறது. இந்த பூமியிலுள்ள பல உயிரினங்கள் தோலுரிக்கின்றன. அதற்கான காலம் வந்துவிட்டதாக அவை நினைக்கும்போது தங்கள் தோலின் ஒரு அடுக்கை விட்டுச் செல்கின்றன இது ஒரு புதிய துவக்கம்.


புத்தாண்டு வரும்போது, அறிபமானவற்றை செய்யவேண்டும் என பலரும் நினைக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் குதூகலமாக இருப்பது என்றால் ஏதோ அற்பமானதை செய்வது என்று எண்ணுகின்றனர் நாம் ஆழமிக்க ஏதோ ஒன்றைச் செய்து களிப்படையலாம் என்று எப்போது நாம் உணர்ந்துகொள்ளப் போகிறோம்? ஆகவே வரும் புத்தாண்டில் உங்களைவிட பெரியதொன்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் தைரியம் இருக்கிறதா? அதுதான் மனிதராக இருப்பதன் பொருள் மற்ற எல்லா உயிரினங்களும் அதன் உள்ளுணர்வின் படி இயங்குகின்றன. இயற்கை விதிகளின்படி வாழ்கின்றன மற்றும் இறக்கின்றன மனிதனாக இருப்பது என்றால் இந்த இயற்கை விதிகளைக் கடந்து, நம்மைவிட பெரிதான ஏதோ ஒன்றை நிகழ்ச் செய்வது.


ஏனென்றால் நீங்கள் இந்த உயிரை சேமித்து வைக்க இயலாது; அதை நீங்கள் செலவு செய்யவே முடியும். நீங்கள் இங்கு உட்கார்ந்திருந்தாலும், அது மடிந்துவிடும். நீங்கள் நடந்தாலும் அது மடிந்துவிடும், நீங்கள் அற்பமாக ஏதாவது செய்தாலும், அது மடிந்துவிடும். நீங்கள் அற்புதமான ஒன்றை உருவாக்கினாலும், அது எப்படியும் மடிந்துவிடும் நீங்கள் இந்த உயிரை ஒரு சட்டத்தில் இட்டு எங்கோ வைத்துவிட முடியாது அது போயாக வேண்டும் எவ்வாறு என்பதுதான் ஒரே விஷயம். இந்த எவ்வாறு என்பதுதான், மனிதனாக இருப்பதன் சிறப்பம்சம் வேறெந்த உயிரினமும் எப்படி உயிரை செலவிடுவது என்று தேர்வுசெய்ய முடியாது -அது அவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாம் எவ்வாறு உயிரை செலவிடுவது என்பது நம் கையில் உள்ளது எவ்வளவு அழகானதாக எவ்வளவு ஆழமானதாக எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக, எவ்வளவு அற்பமானதாக, எவ்வளவு பயனற்றதாக அல்லது எவ்வளவு மந்தமானதாக நீங்கள் இந்த உலகில் ஏதோ அற்புதமான ஒன்றை உருவாக்க முடிந்தால் நல்லது ஆனால், ஏதோ அற்புதமானது உங்களுக்குள் நடக்கவேண்டும் அல்லவா? ஏதோ அற்புதமான ஒன்று உங்களுக்குள் நிகழ்ந்தால் நீங்கள் உலகத்தில் அற்புதமான ஒன்றை உருவாக்குவதை யாரால் தடுக்க இயலும்? இந்த உலகிற்கு உங்களை தடுப்பதற்கு அப்படி ஒரு சக்தி கிடையாது அனைவரும் முதலில் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பதற்கு, அரசியல் அமைப்பில் திருத்தங்கள் செய்யவேண்டுமா என்ன? இதற்கு ஒரு சட்டமோ பிரகடனமோ தேவையில்லை உங்கள் உணர்வுகளை அடைவதற்கு ஒரு தீர்மானம் மேற்கொள்ளத் தேவையில்லை.


நீங்கள் மேற்தோலை உதிர்க்கும் நேரம் வந்துவிட்டது. பழைய தோலை விடுத்து உயிரோட்டமாகவும் புதிதாகவும் வாருங்கள். ஒரு பாம்பு அல்லது ஒரு கரப்பான் பூச்சி அல்லது வேறு ஒரு உயிரினமோ தன் தோலை உரித்தால் குறிப்பிட்ட சில காலத்துக்கு வலுவற்றதாகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு மேற்தோல் இல்லாமல் இயற்கையில் வாழ்வது பெரிய ஆபத்து ஒரு எறும்புக்கூட்டம் உங்களை பிடித்து கொன்றுவிடும் அது ஒரு பெரிய அபாயம், ஆனால் இந்த சிறிய உயிரினங்களுக்குக்கூட இத்தனை நுட்பமான அறிவு இருக்கிறது. உங்கள் வாழ்வில் அந்த ஆபத்தை எதிர்கொள்ளும் தருணமிது உங்களிடம் பயனில்லாத வெகுநாளாக உங்கள் மேல் தொங்கிக்கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை உரித்தெறியுங்கள் வரும் சில தினங்களில் அதை உரித்தெறியுங்கள் புதிதாக ஏதோ ஒன்று நிகழட்டும். வாழ்க்கை உங்களை என்ன செய்கிறது என்று பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். 


(மேற்கண்ட கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைத்தும் சத்குருவினுடைய கருத்துகள் மட்டுமே ஆகும்)