கரூர் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


 




 


 


சிறப்பு திருவிளக்கு பூஜை:


ஆடி மாதம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து,அன்னதானம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இரவு மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.


பூஜையை முன்னிட்டு பக்தர்கள் திருவிளக்குடன் ஆலயம் வருகை தந்தனர். அதன் தொடர்ச்சியாக திருவிளக்கு விழா குழுவின் சார்பாக பக்தர்களுக்கு வாழை இலை, தேங்காய், பழம், உதிரிப்பூ, மஞ்சள் கயிறு, குங்குமம், சந்தனம், அரிசி, வளையல், சூடம், பக்தி, விளக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்கி திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்தினர். ஆதி மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் மற்றும் திருவிளக்கு பூஜையை கண்டு ரசித்தனர்.


தான்தோன்றி மலை மதுரை வீர சுவாமி ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம்.


 




 


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றி மலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரர் மற்றும் மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு விநாயகர், மாரியம்மன், மதுரை வீர ஸ்வாமி பொம்மி அம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக மாரியம்மன் மற்றும் மதுரவீரன் சுவாமி, பொம்மியம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு வெற்றிலையால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.




 


கரூர் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் தான்தோன்றி மலை மதுரவீரன் சாமி ஆலயத்தில் வெற்றிலையால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial