திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு பயில செல்வதற்கு மற்றும் பள்ளி முடிந்த பிறகு, தங்களது கிராமத்திற்கு, செல்ல பேருந்து வசதிகள் இல்லை என்றும் மாணவிகள் பல கிலோமிட்டர் நடந்து செல்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே மாணவிகள் தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிக்க காத்துக்கிடந்தனர். 


"இது குறித்து ABP Nadu செய்தி குழுமத்தில் இருந்து மாணவிகளுடன் பேசினோம்" 


நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்கா,  தாணிப்பாடி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள், எங்கள் கிராமத்தில் இருந்தும் பக்கத்து கிராமமான புதூர்செக்கிடி போன்ற எங்கள் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள், தாணிப்பாடி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் கிராமத்தில் இருந்து கல்நாட்டு புதூர் செல்லும் பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்று பயின்று வந்தோம்.



சில வருடங்களுக்கு முன்பு கொரோனா தொற்று வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசு பேருந்து கொரோனா தொற்றால் பேருந்து வசதிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் எங்களுக்கு ஆன்லைன் மூலமாக எங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைவாக உள்ளதால் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டலாம் என தமிழ்நாடு பள்ளிகல்வி அறிவித்திருந்து, இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்களும் பக்கத்து கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகிய நாங்கள் சுமார் 45க்கும் மேற்பட்டோர் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளதால் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.


எங்களுக்கு வழக்கமாக வந்த பேருந்து கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. இதுவரையில் எங்கள் கிராமபகுதிக்கு இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் எங்கள் கிராமத்தில் இருந்து தனியார் ஆட்டோ ஒன்று தானிப்பாடி பகுதிக்கு சென்றது. அதில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் 40 ரூபாய் பணம் கொடுத்து செல்கிறோம். திடீரென காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் செல்லக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதனால் எங்களுக்களுக்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.



தற்சமயம் எங்களது கிராமத்தில் இருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் உள்ள புதூர் செக்கடி கிராமத்திற்கு மாலையும், காலையும் இரு வேலையும் அரசு பேருந்து வந்து செல்கின்றது. இந்த அரசு பேருந்தை எங்கள் கிராமம் புளியம்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றால். எங்கள் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் நாங்களும் பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று இதற்காக தான் நாங்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் எங்களை மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிக்க முடியவில்லை, காவல்துறையினர் பின்னர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி எங்களது மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விடுகிறோம். உங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தருவார் என எங்களிடம் தெரிவித்ததாக மாணவிகள் கூறினர்.