தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிக பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முழுஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் தளர்வுகள் உடன் இரண்டு வாரங்களுக்கு தமிழக முதல்வரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு,  அதனைத் தொடர்ந்து 24-ஆம் தேதி முதல் வருகின்ற ஜூன் மாதம் 7-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் உள்ளனர். இவர்கள் தெருக்கூத்து மற்றும் இசைக்கச்சேரி போன்றவற்றை நடத்தி வாழ்ந்து வருகின்றனர். சென்ற மாதம்  கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்பட்டதால்,”எங்களுடைய வாழ்வாதாரம் இன்றி மிகவும் தவித்த நிலையில் வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களுக்கு கொரோனா நிவாரண நிதி சென்ற ஆண்டை போல எங்களுக்கு இந்த ஆண்டும் தரவேண்டும்” என்று தமிழக அரசிடமும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். 



இக்கலைஞர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இன்றி மிகவும் வறுமையில் வாழ்ந்து வருவதை கண்டு திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,திருப்பத்தூர் ஆகியமாவட்டங்களில் வாழ்ந்து வரும் நாடக கலைஞர்களுக்கும், இசைக்கசேரி நடத்திவருபவர்களுக்கும், வறுமையில் வாடும் கலைஞர்களுக்கும் இன்று ஆரணியில் உள்ள நாடக கலைஞர்களுக்கு நடிகர் பூச்சி முருகனின் சொந்த செலவில் அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவை  வழங்கப்பட்டது.


இத்துடன் நடிகர் தாடி பாலாஜியும், ஆரணியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களுக்கு கொரோனா தொற்று நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் நாடக கலைஞர்கள் மற்றும் இசைக்கலைச்கர்களுக்கு  கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்களை வழங்கினார். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்லகூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், தமிழக அரசு கூறும் வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 



இதனைத்தொடர்ந்து ஆரணி பகுதியில், இரவுபகல் பாராமல் கொரோனா தொற்றிலும் அயராது பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு, நடிகர்  தாடி பாலாஜி மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் உணவு  போன்றவற்றை வழங்கினார்.  அதன் பின்னர் நாடக கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு  ஊரடங்கில் படும் துயரங்களை பற்றி சங்கம் சார்பில் முடிவுகள் எடுக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் கொரோனா நிவாரணம் பெற்று தரப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.