திருவண்ணாமலையில் நேர்த்தி கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்!

திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது மகள் செந்தாமரை ஆகியோர் நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது . அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வெற்றி பெறுவதற்காக, பிரசித்திப் பெற்ற அனைத்து கோயில்களிலூம் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்து வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து வேண்டிய வரம் கிடைக்கும் நாள் என்று இந்து மத பக்தர்களால் நம்பப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவில் உள்ளது.

Continues below advertisement

அதன் பின்புரம் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார் அந்த மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் பல லட்ச கணக்கான பக்தர்கள் நினைத்த வரம் வேண்டும் என்று கிரிவலம் வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வர் ஆக வேண்டும் என்று  ஏப்.26 சித்ரா பவுர்ணமியில் செந்தாமரை கிரிவலம் சென்றுள்ளார் என்றும், முன்னதாக, அருணாச்சலேஷ்வரர் திருக் கோயிலில் சித்ர குப்தனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார் என்றும் கூறப்பட்டது.

 



முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். ஆன்மீகத்தில் அதித நம்பிககை கொண்டவர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக சைவ மற்றும் வைணவத் ஸ்தலங்களில் தொடர்ந்து சென்று, தமிழக முதல்வராகத் தனது கணவர் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்க வேண்டும் என வேண்டிக்கொண்டு வந்தது அனைவராலூம் அறியப்பட்டவை ஒன்றே.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் பதவியேற்றுக் கொண்டார். தனது வேண்டுதல் நிறைவேறியதால், சைவ மற்றும் வைணவத் தலங்களுக்குச் சென்று துர்கா ஸ்டாலின் நேர்த்திக் கடன் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.சிலமாதங்களுக்கு முன்பு காஞ்சிபுத்தில் உள்ள மீனாட்சி அம்மன்  சன்னதியில் சென்றும் சாமி தரிசனம் செய்துவந்தார்.

 



 

அதனைத்தொடர்ந்துஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள திருமலையில் உள்ள வைணவத் திருத்தலமான ஸ்ரீவெங்கடாஜலபதி கோயிலுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு துர்கா ஸ்டாலின் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, சைவ திருத்தலமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் தனது மகள் செந்தாமரையுடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றம் அம்மன் சன்னதிகளில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. பின்னர் அவர்களுக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர்.

 


 

அதன் பிறகு காலாபைரவரை தரிசனம் செய்ய சென்ற போது அங்குள்ள பக்தர்கள் துர்கா ஸ்டாலினை கண்டு முதலமைச்சரின் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்றும்,கூறியதோடு அண்ணாமலையார் அருள் அவருக்கு எப்போது உள்ளது அவர் எப்போதும் நல்லாட்சியும் புரிவார் என்று கூறினார்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

MK Stalin Statement: பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Continues below advertisement
Sponsored Links by Taboola