கரூரில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் 16 நபர்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 23017ஆக உள்ளது. இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 11, இதனால் கரூர் மாவட்டத்தில் 22475 நபர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததவர்கள் யாரும் இல்லை. 




இதனால் இதுவரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 351 உள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றுவரை 191 நபர்கள் கொரோனா  சிகிச்சையில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 5000 கொரோனா தடுப்பூசிகள் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் போடப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து, நாளை தடுப்பூசி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளிவரவில்லை. மாவட்டத்தில் 10 க்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் நகரப்பகுதியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் இயங்க கூடிய கொரோனா தடுப்பூசி சிறப்பு மையத்தை நேரில் ஆய்வு செய்து திறந்து வைத்தார்.





இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலவரத்தை தற்போது காணலாம்.


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் 46 நபர்கள். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 48423 நபர்கள் தொற்று பாதிப்பு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து 48 நபர்கள் வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 47435 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பலனின்றி இறந்தவர் எண்ணிக்கை 465 ஆக உள்ளது. தற்போது நாமக்கல் மருத்துவமனையில் 523   நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.




கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதால் சற்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். எனினும் தமிழக அரசு கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. ஆகவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரப் பெருமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளி  உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன.