திருப்பத்தூரில் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது அங்கிருந்த முதியவரை தாக்கிவிட்டு சிறுத்தை ஊருக்குள் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியினை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.


சிறுத்தை நடமாடும் காட்சி:


 






திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறுத்தை புகுந்த நிலையில், அங்கிருந்து சிறுத்தையானது தப்பித்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதனால் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.


முதலில் சிறுத்தை வீட்டிக்குள் புகுந்ததாகவும் பின்னர், அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையை சிறுத்தை தாக்கியுள்ளது.


மாவட்ட வன அலுவலர் பேட்டி:



இதையும் படிக்க: Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தும் சிறுத்தை; குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் - வனத்துறை எச்சரிக்கை