திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்ட நிலையில் அங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

Continues below advertisement

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் தூணில் தீபமேற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி அளித்து தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீப நாளில் வழக்கு தொடுத்த மனுதாரர்களில் ஒருவரான ராம ரவிகுமாரை 10 பேருடன் சேர்ந்து  சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபமேற்ற நீதிபதி உத்தரவிட்டார். 

ஆனால் தமிழக போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி அளிக்கவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இருநீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய அவர், இன்று இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 

Continues below advertisement