பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள், குறைப்பது நாங்களா? அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ஓமிக்ரான் தொற்று செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் அருகே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் கண்டறிப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வரால் தொடங்கி வைக்க பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு தொடங்க பட்டு இந்த ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கூடுதலாக இல்லை மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.
புதியவகை தொற்று பரவவே இல்லை. கொரோனா தொற்று தமிழகத்தில் 50க்கும் கீழ் தான் உள்ளது.தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதத்தில் கொரோனாவிற்கு உயாிழப்பு எதுவுமில்லை.காலி பணியிடங்கள் நிதிநிலை அறிக்கையில் கூறியவாறு 4000க்கும் மேற்பட்ட காலிபணியுடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.செவிலியர்கள் 4448பேரும். சுகாதார பணியாளர்கள் 2448பேரும், என மொத்தம் 7296பேர் நியமிக்க பட்டுள்ளனர்.ஏற்கனவே இருந்த ஊதியத்தை விட செவிலியர்களுக்கு 4000 ரூபாயும், சுகாதார பணியாளர்களுக்கு 3000ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் 4ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
72 மணி நேரத்தில் தேர்தல் வாக்குறுதியை (பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதாக சொல்லி இருந்தது) நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது அவர்கள் குறைப்பது நாங்களா? என்று அனைத்து மாநிலங்களும் விமர்சனம் செய்து வருகிறது. இதையும் அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.