கடந்த சட்டமன்ற தேர்தலில் பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினை தோற்கடித்து திமுக ஆட்சியினை பிடித்தது அதற்கு பின் தற்பொழுது முதன் முறையாக இந்த ஆண்டின் தமிழக பட்ஜெட் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது, அதன் தொடர்ச்சியாக  தமிழகத்தில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பின் முதன் முதலாக கடலூர் சுற்றுலா மாளிகையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்தித்தார்.



தமிழகத்தில் தமிழக முதல்வர் வேளாண்துறையில்  ஓர் புரட்சி செய்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக தமிழகத்தில்  உழவர் நலத்துறைக்கு என தனியாக  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் வாயிலாக விவசாயிகளுக்கு லாபம் பெறுகின்றன பல திட்டங்களை அறிவித்துள்ளார் நமது முதலமைச்சர், இதனை அனைத்து கட்சியினர் பொதுமக்கள் என அனைவரும் எந்த பாகுபாடுமின்றி வரவேற்றுள்ளனர்.



இவ்வாறு முதல் முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்துள்ள இந்த நேரத்தில் அதனை அறிவிக்கும் வாய்ப்பினை எனக்கு  எனக்கு அளித்த தமிழக முதல்வருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் 500க்கும் மேற்பபட்ட நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுள்ளது, அதுமட்டுமின்றி இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 350 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்படி குறுவை சாகுபடிக்கு என கட்டவேண்டிய காப்பீடு தொகையினை விவசாயிகளை காட்டுமாறு எவ்வாறு கூறமுடியும். அதுமட்டுமின்றி இன்னும் 10 அல்லது 20 நாட்களில் குறுவை சாகுபடி முடிந்து சம்பா சாகுபடி துவங்கிவிடும்.



எனவே இந்த நிலையில் குறுவைக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும் கூறுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சொல்வது ஆகும். எனவே தேவையில்லாமல் உண்மை நிலை அறியாமல் இது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அறிக்கைகள் வெளியிட வேண்டாம் 



அதுமட்டுமின்றி பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று கொள்முதல் நிலையங்கள் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அனைத்து தரப்படும், பின் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு,  கூட்டுறவு சங்க தலைவர்களில் அதிமுகவினர் உள்ளதால் ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்க இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர், இதுமட்டும் இன்றி கரும்புக்கென வழங்கவேண்டிய கரும்பு நிலுவைத்தொகை 180 கோடியினை தமிழக அரசு வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி சம்பா பயிறுக்கான காப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும் என எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.