காவிரியில் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக சரிவு.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 11,630 கனஅடியாக சரிந்தது. காலை வினாடிக்கு, 16 ஆயிரத்து 191 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நீர்வரத்து சரிந்தது, சம்பா சாகுபடி பணிக்காக ஆற்றில் இருந்து 10,810 கான அடியும், நான்கு பாசன வாய்க்காலில் 820 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 471 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 563 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 89.08 அடியாக இருந்தது.
கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை வினாடிக்கு 2,024 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி 1,057 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 25 அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 39 புள்ளி 3 7 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால் நங்காஞ்சிஆற்றில் இருந்து இரண்டு பாசனகளை வாய்க்காலில் தலா 40 கன அடி உவரி நீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது.
பொன்னணி ஆறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 28.16 அடியாக இருந்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழை இல்லை
மீன்கள் விற்பனை மும்மரம்.
மாயனூர் காவிரி கதவணை பகுதியில் உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களைப் பிடித்து வந்து புதிய கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஜிலேபி, ரகமீன்கள் மீனவர்களின் வலைகளில் அதிக அளவில் பிடிபடுகின்றன. இந்த ரகம் மீன் கிலோ40 ரூபாய்க்கும் விற்பனையானது. கொண்டை மீன் கிலோ 100 ரூபாய்க்கும் ரோகு பாறை உள்ளிட்ட மீன் வகைகள் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையும் விற்பனையாகின. 400 கிலோ அளவில் மீன் விற்பனை செய்யப்பட்டதாக மீனவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாயனூரில் மீன் வாங்க கரூர் குளித்தலை, லாலாபேட்டை, பஞ்சப்பட்டி, சேர்ந்த புலியூர் ஆகிய பகுதிகளில் மக்கள் குவிக்கின்றனர்.