தடுப்பூசிக்கு உத்திரவாதமில்லை; முககவசம் கட்டாயம்-சுகாதாரத்துறை இயக்குனர்

கொரோனா தடுப்பூசிக்கு 100 சதவீதம் உத்திரவாதம் இல்லை என்றும், தடுப்பூசி போட்டவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தே.மு.தி.க., துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கடந்த 17ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். பிரசாரத்தில் இருந்த அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டு சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சுதீஷிற்கு கெரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது குறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், ‛தடுப்பூசிகளுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் இல்லை,’ என, தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தியாவில் போடப்படும் தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தி 14 நாட்களுக்கு பிறகு தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், முதல் அல்லது இரண்டாது தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அலட்சியமாக இருக்க கூடாது என கூறியுள்ள செல்வ விநாயகம், தொடர்ந்து முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் , அடிக்கடி கைகளை கழுவியும் பாதுகாப்ப இருக்க வேண்டும், என பேட்டியளித்துள்ளார்.

Continues below advertisement