திருச்சி ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்றுக் கொண்டிருந்தது. முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாமல் வடமாநில தொழிலாளர்கள் ஏறியதால் திருச்சியில் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.  பெட்டியின் வாசலை அடைத்தபடி நின்ற வடமாநில தொழிலாளர்களை மட்டும் அதிகாரிகளால் இறக்கி விடப்பட்டனர்.


வடமாநில தொழிலாளர்கள் சிலரை இறக்கியபின்பு ரயில் புறப்பட்டு சென்றது. முன்பதிவு செய்யாத வடமாநில தொழிலாளர்களை ரயிலில் இருந்து இறக்க பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


ரயில்வே துறையில் புதிய இரவு நேர விதிமுறைகள்:  



  • இருக்கையிலோ, ரயில் பெட்டியிலோ எந்தப் பயணியும் மொபைலில் உரத்த குரலில் பேச கூடாது.

  • இயர்போன் இல்லாமல் அதிக டெசிபலில் எந்தப் பயணியும் இசை கேட்க கூடாது.

  • இரவு விளக்கு தவிர, இரவு 10 மணிக்கு மேல் மற்ற விளக்குகளை எரிய வைக்கக்கூடாது.

  • இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஆன்-போர்டு TTE அதாவது ரயிலில் இருக்கும் டிடி , கேட்டரிங் ஊழியர்கள் மற்றும் பிற ரயில்வே பணியாளர்களும் ரயில்களில் பொது நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும், சக பயணிகளுக்கு சிக்கல்களை உருவாக்கினால் மக்களுக்கு வழிகாட்டவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் ரயில் பெட்டிகளில் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு எதிராக எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும், இந்திய ரயில்வே விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த செயலையும் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  10 மணிக்கு மேல் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:  



  • பயணிகளின் டிக்கெட்டைப் பரிசோதிக்க TTE வர கூடாது.

  • இரவு விளக்குள் மட்டும் எரியவிட வேண்டும்.

  • குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு உரையாட கூடாது.

  • நடு படுக்கையில் இருப்பவர்கள் தங்கள் படுக்கைகளை கீழே இறக்கினால், கீழ் படுக்கையில் இருப்பவர்கள் எதிர் கருத்து தெரிவிக்கக்கூடாது.

  • இரயில் சேவைகளில் ஆன்லைன் உணவு இரவு 10 மணிக்கு மேல் உணவு வழங்க கூடாது. இருப்பினும், இரவிலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் இரயிலில் உங்களின் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம


நெகிழ்ச்சி சம்பவம்:


சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ராஜாமணி- பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் விஷ்ணு பிரியாவின் பூப்புனித நீராட்டு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுமாறு  தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 


நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று ராஜாமணியின் அழைப்பை ஏற்று திருமண மண்டபத்திற்கு வந்த வடமாநில தொழிலாளர்களை கண்டு உறவினர்களும், அப்பகுதி மக்களும் ஷாக்காகி போயினர். காரணம் தங்களது உரிமையாளரை சகோதரன் போல் பாவித்து வட மாநில தொழிலாளர்கள் கையில் சீர்வரிசையுடன் வருகை தந்தனர். மேலும் உறவினர்கள்போல பெண்ணிற்கு நலங்கு வைத்து மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர். ராஜாமணி குடும்பத்தினரும் வட மாநில தொழிலாளர்களை நன்கு உபசரித்தனர். 


இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவிய நிலையில், இந்த சம்பவம் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் பாதுகாப்பாகவும், மக்களின் நல்மதிப்பையும் பெற்றிருப்பதையும் காட்டுவதாக அமைந்துள்ளது.