தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏ.ஜி.பாபு ஐ.பி.எஸ்., சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆனி விஜயாவை காவல் பயிற்சி பிரிவு கூடுதல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 


அதேபோல், எஸ். செல்வகுமார் நாகை மாவட்ட கடலோர காவல்படை குழும எஸ்.பி.யாகவும், எஸ். ராதாகிருஷ்ணன் சேலம் காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பி. விஜயகுமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பி.யாகவும், எம்.பாஸ்கர் திருப்பூர் காவல் தலைமையிடத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர்.