தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்து நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் நெறிமுறைகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
* பள்ளி வளாகங்களில் மாணவர்கள் நுழையும் முன், அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும்
* மாணவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
* பள்ளி வளாகங்களில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னரே வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும். எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
* பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
*அடிக்டி கைகனை சுத்தம் செய்ய பள்ளி வளாகங்களில் Soup, Hand whash முதலியவை இருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்தல் வேண்டும்.
* தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
* வகுப்பறைகளில் உரிய காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
* அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள போதுமான அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்