விழுப்புரம்: அதிகப்பட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக திட்டத்திற்காக  செலவிடுவதுதான் திறன்மிகு நிர்வாகமாகும் அதை தான் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்பார்ப்பதாகவும், மக்களோடு பழகி அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை விவசாயிகள், மீனவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தொழில்துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டார் தொடர்ந்து மூன்று மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இன்று இரண்டாவது நாளாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளார் உதயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, பொன்முடி, எவ.வேலு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சிவி.கணேசன், மஸ்தான் கலந்து கொண்டுள்ளனர்.


விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், பணிகள் குறித்தும் மேலும் அரசின் நலத்திட்டங்கள் பொது மக்களுக்கு சென்று சேர்கின்றனவா என இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது ஆய்வு கூட்டத்திற்கு முன்னதாக மூன்று மாவட்டங்களில் சிறப்பாக சமூக சேவையாற்றியவர்களுக்கு கேடயம் வழங்கினார். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அரசு செயல்திட்டங்கள் செயலாக்குவதில் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது இதுவரை 14 மாவட்டங்களை இணைத்து ஆய்வு கூட்டம் நடத்தபட்டுள்ளது. துறை செயலாளர்கள் மட்டுமே முதலமைச்சரை சந்திக்க முடியும் ஆலோசனை பெற முடியும் என்ற நிலை இருந்தது ஆனால் அது போதாது என தான் நினைப்பதாகவும் இந்த ஆய்வு கூட்டத்தின் மூலம் பல்வேறு வித்தியாசங்களை பார்ப்பதாக தெரிவித்தார்.


கள ஆய்வு திட்டத்தின் மூலம் எப்போது முதலமைச்சர் வருவார்களோ என்று திட்டங்கள் முடுக்கி விடப்படுவதால் மக்கள் பயனைடைவதாகவும் அறிவிக்கப்பட்ட விரைவில் தொடங்கப்பட்டு தரமானதாக முடிக்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்ப்பதாக கூறினார்.  கோட்டையில் எனது அருகில் டேஷ் போர்டு ஒன்று வைத்துள்ளதாகவும் அதன் மூலம் எந்ததெந்த திட்டங்கள் வளர்ச்சி பெற்று வருவதை அறிந்து கொள்வதாகவும் மாவட்ட அளவில் கண்காணிப்பு மிகவும் அவசியம் என்பதால் தொடர்சியாக கண்காணிக்காத்தில் எந்த திட்டமாக இருந்தாலும் வளர்ச்சி பெறும் ஊரக வளர்ச்சி துறை கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதோடு அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உறுதுணையாக  உள்ளது. மூன்று வருடங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களை வேகபடுத்த வேண்டும் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை கவனமாக தேர்ந்தெடுத்து பணிக்கு வரக்கூடியவர்களுக்கு தாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் தன்னுடைய காலத்தில் இத்திட்டதினை முடித்து காட்டினேன் என முடித்து காட்டுங்கள் என வலியுறுத்தினார்.


குடிநீர் சுகாதாரம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வேண்டும் வேளான்மை துறையில் கலைஞரின் ஒருங்கினைந்த வேளான் வளர்ச்சி திட்டம் அதன் செயலாக்கத்தில் பல துறைகளில் வளர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.  மூன்று மாவட்டமும் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயிகள் வளம் பெற வேண்டும் மக்கள் தேவை ஒரு பக்கம் பூர்த்தி செய்தாலும் பலாயிரம்கோடி ஒரு பக்கம் செலவு செய்யபட்டு வருகிறது. ஒவ்வொரு துறை செயலரும் மற்ற துறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்த ஆய்வு கூட்டம் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.  அதிகபட்ட நிதியை குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களுக்காக திட்டத்திறகாக  செலவிடுவதுதான் திறன் மிகு நிர்வாகமாகும் அதை தான் மாவட்ட ஆட்சியரிடம் எதிர்பார்ப்பதாகவும் மக்களோடு பழகி அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்