தேரோட்டம் நடைபெறும் கோயிலின் வீதிகளில் உள்ள மின் கம்பிகள் இனி புதைவடமாக மாற்றப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி இதனை தெரிவித்தார்.


பூமிக்குள் மின்வயர்கள் புதைக்கப்பட்டு மின்சாரம் செல்வதே புதைவடமாகும். நேற்று தஞ்சையில் மின்சார கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.