இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது: 


” இன்று ( மார்ச் 2) முதல் வரும் 8ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


இயல்பை விட அதிக வெப்பநிலை:


இன்று ( மார்ச் 2) முதல் மார்ச் 4 வரை: தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக  இருக்கக்கூடும். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 



கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.


பனிக்காலம் முடிந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.


அதிலும் மாலை 6 மணி வரையிலும் கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் முதல் கட்டமாக வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில் அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயல்பை விட 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.


மேலும் படிக்க 


Nirmala Sitharaman : கார்ப்பரேட் வரி குறைச்சது இதுக்காகத்தான்.. மனம் திறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!


PM Surya Ghar: பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்திற்கு விண்ணப்பிப்பது, மானியம் பெறுவது எப்படி?