Annamalai : செந்தில் பாலாஜி டிஸ்மிஸ்  விவகாரத்தில் ஆளுநர் வாபஸ் பெறவில்லை; நிறுத்தி தான் வைத்துள்ளார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ்(Senthil Balaji Dismissed) செய்வதாக ஆளுநர் ஆர்.ரவி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் நடவடிக்கையை நிறுத்தி வைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


"ஆளுநர் வாபஸ் பெறவில்லை”


இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”செந்தில் பாலாஜி விவாகரத்தில் கடந்த இரண்டு வாரமாக முதல்வர், அவரை காப்பற்றுவதற்கான எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் பாதுகாப்பது ஏன்?  அமைச்சரவையை முதல்வர் சரியாக வைக்கவில்லை. அமைச்சருக்காக முதல்வர் வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார்.


அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்குவதாக அறிக்கை விட்டிருந்தார். அதன் பிறகு நிறுத்தி வைத்தார். இதற்கு முதல்வர் அமைச்சர்கள் என பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு ஆலோசனைகளுக்கு  பிறகு தான் இந்த முடிவை ஆளுநர் எடுத்தார். எனவே, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் ஆளுநர் வாபஸ் பெறவில்லை. நிறுத்தி தான் வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார். 


"அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் வழக்கு உள்ளது”


தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடுஅமைச்சர்கள் பலரின் மீது ஊழல் வழக்கு உள்ளது. புதிதாக பொறுப்பேற்ற டி.ஜி.பி, தலைமை செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆனையர் அவர்களுக்கு வாழ்த்துகள். நேர்மையாக பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன். 


சிதம்பரம் கோவில் விவாகரத்தை பொறுத்தவரை, கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என்று அங்குள்ள தீட்சிதர்கள் சொல்கிறாரக்ள். மாநில அரசு தீட்சிதர்கள் விஷயத்தில் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. அப்படி தொந்தாரவு கொடுத்தால் நானே அங்கு சென்று போராடுவேன்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


மேலும், ”மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பல முக்கிய கருத்துகளை சொல்லியிருக்கிறார் இயக்குநர். யார் நினைத்தாலும் அரசியலுக்கு வரலாம். படத்தில் ஒருவர் புகைபிடிக்கிறார்  என்றால் அது சென்சார் கட்டுபாட்டோடு தான் வருகிறது. படத்தில் புகைப்பிடிப்பதை பார்த்து பலர் புகைப்பிடிபார்கள் என்று சொல்வதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன்” என்றார்.