அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இது குறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , ''அரசுப் பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30%ல் இருந்து 40% ஆக உயர்த்தப்படும். கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். முதல் தலைமை பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தோருக்கு அரசுப்பணியின் முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு முகமைகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படும். அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு 2 ஆண்டாக அதிகரிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.