நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நவம்பர் 16 முதல் 24 வரை தமிழ்நாடு மின்வாரியம் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை வேளாண்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் முகாம்கள் நடைபெற உள்ளது. அதனை பொதுமக்கள் தெரியப்படுத்தும் வகையில் செய்தியாக வெளியிட வேண்டும் என கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா, பழங்குடியினர் பள்ளி மாணவர் விடுதி தற்போது புதிதாக திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திறக்கப்பட்டு இருந்த அறையின் உள்ளே சென்று பார்த்த போது அறை முழுவதும் ஒட்டடை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் விடுதி கண்காணிப்பாளரிடம் அழைத்து ஒட்டடைகளை உடனடியாக நீக்க உத்தரவிட்டார். மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் அறைகளை பார்வையிட்டு மாணவரிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் மதிய உண்பதற்கு வந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி உணவுகளை சோதனை மேற்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுவை ஆட்சியர் உண்டு உணவு தரமாக உள்ளதாகவும் மாணவரிடம் கூறினார்.
அதற்கு மாணவர் ஒருவர் நீங்கள் வரும் பொழுது மட்டும் தான் உணவு நன்றாக இருக்கும், நாளை தண்ணீர் போல் இருக்கும் என மாணவர் மாவட்ட ஆட்சியிடம் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உமா மாணவர்களிடம் குறைகளை கேட்டு கூடிய விரைவில் உங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி செய்து தரப்படும் என உறுதி அளித்தார். மேலும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தான் முதல்வர் விடுதியை கட்டி தந்துள்ளார். எனது அனைவரும் இதனை பயன்படுத்திக் கொண்டு நன்றாக படியுங்கள். மாலை நேரத்தில் விளையாடுவதற்கு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பள்ளி விட்டு விடுதிக்கு வந்தவுடன் விளையாடுங்கள் என்று மாணவர்களிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, மாணவர்கள் கடந்தாண்டு தங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு வசதி வழங்குவதாக தெரிவித்து சென்றீர்கள் ஆனால் இன்று வரை வரவில்லை எனக் கூறினர். அதேபோல விடுதி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கவில்லை என மாணவர்கள் ஆட்சியரிடம் கூடிய நிலையில், விரைவில் அனைவருக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்து அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். ஆய்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.