கரூரில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் முதல் கட்டமாக  துவங்கப்பட்டுள்ளது.


 






கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இந்த முகாமை துவக்கி வைத்தார். முதல் கட்டமாக மாவட்டம் முழுவதும் 390 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மொத்தம் கரூர் மாவட்டத்தில் 583 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற திட்டமிடப்படுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விண்ணப்பம் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை 90 சதவீதம் விண்ணப்பங்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கும் செய்யும் பணி நடந்து முடிந்து விட்டது. பயோ மெட்ரிக் முறையில் விண்ணப்ப பதிவு ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 




ஒவ்வொரு முகாமிலும் காலை 30 பேரும், மாலை 30  பேரும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. விண்ணப்பம் பெற்றதும் உடனே பயனாளிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.  விண்ணப்பதாரர் தகுதி உடையவரா? தகுதியற்றவரா? என்பது குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் 10 நாட்கள் முகாம் நடத்தப்படும். பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதில் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுவதால் பணிகள் எளிமைப்படுத்தப்படுவதோடு, தவறுகள் எதுவும் நடந்திராத வகையில் அமையும் என்றார்.


 




தொடர்ந்து பத்து நாட்கள் 24 ஆம் தேதிஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் காலையில் 9:30 மணிக்க ஆரம்பித்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெறும். அவர்கள் அனைவருக்கும் என்றைக்கு வர வேண்டும், எந்த நேரத்தில் வர வேண்டும் என்று விண்ணப்பங்களும் டோக்கன்களும் விநியோக்கப்பட்டுள்ளது வரும் மக்களை சரியான முறையில் வரவேற்று இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் நாளில் ஒவ்வொரு முகாமிலும் காலை 30 விண்ணப்பங்களும் மதியம் 30 விண்ணப்பங்கள் இந்த விண்ணப்ப பதிவுசெய்யும் முகாமில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முகாம்கள் 10 நாட்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரண்டு , மூன்று
தினங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் காலை 40 விண்ணப்பங்களும் மதியம் 40 விண்ணப்பங்கள் என்று அடுத்தடுத்து நாட்களில் எண்ணிக்கையில் கூடிக் கொண்டேபோகும். இந்த விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு பின்னர் கணினி மூலம் தகுதியான நபர்களை தேர்வு செய்யும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.  இந்த விண்ணப்பம் பெற்றவுடனே ஒவ்வொருவருக்கும் ஒரு குறுந்தகவல் வரும் அந்த குறுந்தகவல் வந்த பின்னர் கூறிய காலத்தில் அவர்களுடைய தகுதி வாய்ந்தவர்களா, இல்லையா என்ற அடிப்படையில் அவர்களுக்கான செய்தி வெளியிடப்படும்.


இந்த மூகாம் விண்ணப்ப பதிவு பெறக்கூடிய முகாம். இது விண்ணப்பங்கள் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அவர்களுக்காகவே தனியாக தன்னார்வலர்களை நியமித்து உள்ளோம். குறித்த தேதியில் ஓதுக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய விண்ணப்பங்களை கடைசி இரண்டு நாட்களில் விண்ணப்பங்களை பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்வில் கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கந்தராஜா,
துணை பதிவாளர் கரூர் சரகம் திருமதி.அபிராமி, மண்மங்கலம் வட்டாட்சியர் திரு.குமரேசன்,
தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.வினோத் , ஊராட்சி மன்ற தலைவர் திரு.பெரியசாமி
மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.