Vote Percentage: தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவு! இறுதி அறிக்கையை வெளியிட்ட தமிழ்நாடு தேர்தல் ஆணையம் - முழு விவரம்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகீயுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

நாடே உற்று நோக்கிய மக்களவை தேர்தல் நேற்று முன்தினம், முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் 21 மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 6 கோடியே 23 லட்சத்து 33,925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும், 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

Continues below advertisement

வாக்குப்பதிவு:

 காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுப்பெற்றது. ஆனால் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குழப்பங்கள் நீடித்து வந்தது. முதலில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாப் சாஹூ வெளியிட்ட அறிக்கையில், 72.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை ஆகிய தொகுதிகளில் 65 சதவிகித்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. கோவையில் 70 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக கூறப்படட்டது. 

69.72 சதவீத வாக்குகள்:

ஆனால், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவானதாக திருத்தி வெளியிடப்பட்டது. அதில், சென்னையை பொருத்தவரையில் வடசென்னையில் மட்டுமே 60 சதவிகித வாக்குகள் பதிவானதாக சொல்லப்பட்டது. மத்திய சென்னையில் 53.91 சதவிகித வாக்குகளும் தென் சென்னையில் 54.24 சதவிகித வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு விவரம் குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 69.72 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. திருவள்ளூர் - 68.59%
  2. வடசென்னை 60.11%
  3. தென்சென்னை - 54.17%
  4. ஸ்ரீபெரும்புதூர் - 60.25%
  5. காஞ்சிபுரம் - 71.68%
  6. அரக்கோணம் - 74.19%
  7. மத்திய சென்னை - 53.96%
  8. வேலூர் - 73.53%
  9. கிருஷ்ணகிரி - 71.50%
  10. தருமபுரி - 81.20%
  11. திருவண்ணாமலை – 74.24%
  12. ஆரணி - 75.76%
  13. விழுப்புரம் - 76.52%
  14. கள்ளக்குறிச்சி - 79.21%
  15. சேலம் - 78.16%
  16. நாமக்கல் - 78.21%
  17. ஈரோடு - 70.59%
  18. திருப்பூர் - 70.62%
  19. நீலகிரி - 70.95%
  20. கோவை - 64.89%
  21. பொள்ளாச்சி - 70.41%
  22. திண்டுக்கல் – 71.14%
  23. கரூர் - 78.70%
  24. திருச்சி - 67.51%
  25. பெரம்பலூர் - 77.43%
  26. கடலூர் - 72.57%
  27. சிதம்பரம் – 76.37%
  28. மயிலாடுதுறை - 70.09%
  29. நாகை - 71.94%
  30. தஞ்சை - 68.27%
  31. சிவகங்கை - 64.26%
  32. மதுரை - 62.04%
  33. தேனி - 69.84%
  34. விருதுநகர் - 70.22%
  35. ராமநாதபுரம் - 68.19%
  36. தூத்துக்குடி – 66.88%
  37. தென்காசி - 67.65%
  38. நெல்லை - 64.10%
  39. கன்னியாகுமரி - 65.44%

 

Continues below advertisement