சேலம் மாவட்டம் தனியார் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டம் குறித்து மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி கருத்தரங்கம் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, நான் முதல்வன் திட்டம் முறையாக செயல்படுத்திடும் பொறுப்பு கல்லூரி முதல்வர்களுக்கும், இயக்குனர்களுக்கும் அதிக அளவில் உள்ளது என்றும், இந்த திட்டம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் எடுத்துரைத்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று பேசினார்.


மாணவர்களிடம் புத்தகத்தில் இருப்பதை மட்டும் சொல்லி கொடுக்கமால், உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் என்றும், படிக்கும் எண்ணங்களை வளர்க்க வேண்டும், வேலை வாய்ப்பை பெரும் வாய்ப்பை பெறுவதற்கு பதிலாக வேலைவாய்ப்பை கொடுபவர்களாக இளைஞர்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.



இந்த திட்டத்திற்காக ஆண்டுக்கு 60 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் வேறு மொழியை கற்றுகொள்ள வேண்டும் என்று பேசிய அவர், பொறியியில் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் ஆங்கிலம் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கி உள்ளது. தமிழகத்தில் 1969 ஆம் ஆண்டுகளில் பெண்கள் படிக்க முடியாதநிலை மாறி,1989 ஆம் ஆண்டு முதல் பெண்கள் அதிகளவில் படித்து வருவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கூறி வரும் திராவிட மாடல் ஆட்சி தான் காரணம் என்றார். பெண்களுக்கு அதிகளவு சலுகைகளை, திட்டங்களை உருவாக்கி பெண்கள் படித்திட முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் என்றார். எல்லோரும் சமம் என்பதே திராவிட மாடல், தமிழக முதலமைச்சரின் எண்ணம் என்று கூறினார். பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்ல அரசு கலை கல்லூரிகளில் புதிய பாட திட்டங்கள் வர உள்ளது என்றும், IAS IPS போட்டி தேர்வுகளை எழுதுவதற்கான பயிற்சிகள் வழங்கிட வேண்டும் என்றார். இருமொழி கல்வி மட்டுமே தமிழக அரசின் நோக்கம் என்றும் மாற்று மொழிகளை கற்று கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.


இந்தி உள்ளிட்ட மாற்று மொழிகளை திணிப்பை மட்டுமே நான் எதிர்க்கிறோம் என்றும் இந்த திட்டத்தின் நோக்கமே, மாணவர்களை வெறும் புத்தக புழுக்களாக மட்டுமில்லாமல், தொழிற்பயிற்சியில் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.



நீட் உள்ளிட்ட நுழைவு தேர்வு ரத்து ஆகும் வரை இதுபோன்ற நுழைவு தேர்விற்கும் பயற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்திட வேண்டும், மாணவ சமுதாயம் வளர்ந்தால் நாடு சிறக்கும் என்றும் இதற்கு ஆசிரியர்கள், முதல்வர்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று பேசினார். தமிழகத்தில் ஆணும் பெண்ணும் சமம் என்ற சமத்துவ கொள்கை வளர்ப்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம்.


தமிழும் ஆங்கிலமும் கட்டாயம் இரு மொழிக் கொள்கையில் இருக்கும். தேர்வு எழுதுகின்ற மொழியாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். இந்த கருத்தரங்கில் சிறப்பு திட்டசெயலாக்க, அரசு முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், உயர்கல்வித்துறை, அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக, மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.