நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாதம்தோறும் மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதியை தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கவில்லை என்றும், இது தொடர்பான கூட்டம் கடந்த 6 மாதங்களாக கரூர் மாவட்டத்தில் நடத்தப்படவில்லை என்றும் தகவல் கிடைத்தது. 


இதையடுத்து, இந்த கூட்டத்தை நடத்தபல முறை கோரிக்கை வைத்தும் இதுவரை இதுதொடர்பான  கூட்டம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜோதிமணி எம்.பி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 


ஜோதிமணி எம்.பியை சமாதானம் செய்யவும் அவரை சமமாக மதிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் கரூர் கலெக்டர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இருவரிடையே பேச்சுவார்த்தை சுமூகமாக எட்டபடாத நிலையில், ஜோதிமணி எம்.பி. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான புகைப்படத்தையும் ஜோதிமணி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 






 


அந்த பதிவில், முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக எத்தனையோ விஷயங்களை செய்ய முனைப்பு காட்டிவரும் வேளையில்,ஒரு சில அதிகாரிகளின் வரட்டு அதிகாரச் சண்டையினால் கடைக்கோடி மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய உதவி உபகரணங்கள் கிடைக்காமல் தடைபடுவது வேதனையளிக்கிறது என்று தெரிவித்திருந்தார். 


கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் வேளையில் ட்விட்டர் மூலம் கலெக்டர் பதிலளித்துள்ளார். அந்த பதிவிற்கு கீழ் பதிலளித்த கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வாய்மையே வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார். 






மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண