தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை வாய்ப்பு:
01.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.04.2023 முதல் 05.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 2, பெரியார் (தேனி), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), ஹரூர் (தர்மபுரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு மழை:
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக மழை 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை என அறிவிக்கப்பட்டாலும் மழை பொழிவு குறைவாகவே உள்ளது.
மேலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது, இருப்பினும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. மழையின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. சென்னை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தாலும் நண்பகல் நேரத்தில் 35 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால மக்கள் கடும் அவதுக்குள்ளாகியுள்ளனர். வெளியில் செல்பவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் பாட்டில் அல்லது பழச்சாறு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.